ஆண்டாளுக்கு பட்டு
30 பாடல்கள் பொறிக்கப்பட்டு இருந்த பட்டுடன் ஆண்டாளும், வெண்பட்டு திருக்கோலத்தில் ரெங்கமன்னாரும் காட்சி அளித்தனர்.
மார்கழி மாத பிறப்ைபயொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். திருப்பாவையின் 30 பாடல்கள் பொறிக்கப்பட்டு இருந்த பட்டுடன் ஆண்டாளும், வெண்பட்டு திருக்கோலத்தில் ரெங்கமன்னாரும் காட்சி அளித்தனர்.