தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். நேற்று இந்த அங்காடிக்கு 129 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.715-க்கு விற்பனையான பட்டுக்கூடு, நேற்று கிலோவிற்கு ரூ.20 விலை குறைந்தது. அதன்படி ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.695-க்கும், குறைந்தபட்சமாக ரூ.587-க்கும், சராசரியாக ரூ.674.74-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.87 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.