தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இந்த அங்காடிக்கு 1,383 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவை ரூ.8¾ லட்சத்துக்கு விற்பனையாகின.
இந்தநிலையில் நேற்று பட்டுக்கூடுகள் வரத்து 579 கிலோவாக குறைந்தது. ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.715-க்கும், குறைந்தபட்சமாக ரூ.530-க்கும், சராசரியாக ரூ.651.58-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 77 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடந்தது.