கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-ஐ திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணை அமைப்பாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் தெய்வீகன், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் பெரியசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஸ்டாலின்மணி ஆகியோர் முன்னிலை வகித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கோரிக்கையை விளக்கி கையெழுத்து வாங்கினார்கள். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் அருள்தாஸ், சங்கத்தின் வட்ட குழு உறுப்பினர்கள் முனியப்பிள்ளை, சுரேஷ், பெரியசாமி, வீரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.