முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடந்தது.

Update: 2023-03-25 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி பஜனை தெருவில் குடியிருப்பவர் முன்னாள் ராணுவ வீரர் அலங்கார பாண்டியன் (வயது 62). இவர் தனது சகோதரர் சண்முகய்யா மற்றும் மகன் பழனிக்குமார் ஆகியோருடன் நேற்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். பின்னர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜை சந்தித்து மனு கொடுத்தனர்.

அதில், "எனது தந்தைக்கு சொந்தமான இடம் நெடுஞ்சாலை மெயின் ரோட்டில் உள்ளது. அங்கு தனிநபர் ஒருவர் எவ்வித அனுமதியும் இன்றி ஓடையில் பாலம் அமைத்துள்ளார். அனுமதி இன்றி கட்டிய அந்த பாலத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், சம்பவ இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்