சித்தா கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம்

பாளையங்கோட்டையில் சித்தா கல்லூரி மாணவ-மாணவிகள் ஊர்வலம் நடந்தது.

Update: 2022-09-19 19:43 GMT

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி சார்பில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி போலியான மருந்து, பக்க விளைவுகள் குறித்து மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சாந்த மரியாள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் டாக்டர்கள் அப்துல்காதர் ஜெயிலானி, கவிதா மற்றும் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலம் வாய்க்கால் பாலம், எல்.ஐ.சி. அலுவலகம், தெற்கு பஜார் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது. அப்போது மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்