தஞ்சையில் நாளை மின் நிறுத்தம்

தஞ்சையில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-06-01 19:05 GMT

தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) நிர்மலா நகர் மின் வழித்தடத்தில் உள்ள மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்க பணி மேற்கொள்வதையடுத்து மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் வி.பி.கார்டன், எலிசாநகர், நட்சத்திரா நகர், மருதம் நகர், நெய்தல் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்