நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

Update: 2023-02-12 19:00 GMT

மொரப்பூர்:

கடத்தூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடத்தூர் கோட்டத்திற்குட்பட்ட கடத்தூர், ஆர்.கோபிநாதம்பட்டி, ராமியனஅள்ளி துணை மின்நிலையங்களில் நாளை செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராமியனஅள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம், பொம்மட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி, கர்த்தாங்குளம், ராமாபுரம், சுங்கரஅள்ளி, ரேகடஅள்ளி, கடத்தூர், சில்லாரஅள்ளி, தேக்கல்நாயக்கன அள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்ல அள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, மணியம்பாடி, ஓடசல்பட்டி, ஓபிலி நாயக்கன அள்ளி, புளியம்பட்டி, கதிர் நாயக்கன அள்ளி, ராணி மூக்கனூர், லிங்கநாயக்கன அள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்