நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேடர்பாளையம், கந்தம்பாளையம்
ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல் கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மோகனூர், சோழசிராமணி
வாழவந்தி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்ன கரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சோழசிராமணி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன் இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.வலசு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவல்களை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.