தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தர்மபுரி செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, பைசுஅள்ளி, சோலைக்கொட்டாய் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தர்மபுரி பஸ் நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி, அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு, ராஜாபேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தர்மபுரி, மாட்லாம்பட்டி, காளப்பனஅள்ளி, வெள்ளோலை, முக்கல்நாயக்கன்பட்டி, குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி, கெங்குசெட்டிப்பட்டி, குப்பாங்கரை, பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஅள்ளி, மொன்னையன்கொட்டாய், நெல்லி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.