குட்கா விற்ற கடைக்காரர் கைது
குட்கா விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர்
குட்கா விற்ற கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூரை அடுத்த உமராபாத் பஸ் நிலையத்தில் நவநீதகிருஷ்ணன் (வயது 30) என்பவர் பங்க்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பங்க்கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் குட்கா போன்ற போதை பொருட்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து நவநீதகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.