வாசுதேவநல்லூரில் கடையடைப்பு போராட்டம்

வாசுதேவநல்லூரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-09-21 19:00 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து பகுதி பொதுமக்கள், அனைத்து வியாபாரிகள் சங்கம், அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து 18 வார்டில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கு கிடைக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் கீழ்புறம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கு.தவமணி தலைமை தாங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி அம்ஜத் கான், வியாபாரிகள் சங்க நிர்வாகி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சுப்பையா வரவேற்று பேசினார்.

மேலும் காலை முதலே வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து பகுதியில் உள்ள மதுரை-தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடைகள், மார்க்கெட், பஜார், கீழ பஜார், பழைய பஸ் நிலையம் உள்பட 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டடிருந்தன.

இதில் ஓ.பன்னீர்செல்வம் அணி நகர செயலாளர் சீமான் மணிகண்டன், தமிழ் மாநில காங்கிரஸ் நகர செயலாளர் போஸ் ராஜா, ம.தி.மு.க. நகர செயலாளர் கணேசன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் செல்வராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் செய்யது, அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சுரேஷ் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்