முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் சிவ்தாஸ் மீனா

தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-08-19 06:54 GMT

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது சிவ்தாஸ் மீனாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்