சுய உதவிக்குழுவினர் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுய உதவிக்குழுவினர் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 25-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுய உதவிக்குழுவினர் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்க அடுத்த மாதம் 25-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மணிமேகலை விருது
திருவாரூ்ா மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்கள், பகுதி, தொகுதி அளவிலான கூட்டமைப்பு, மாநிலம், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மாநிலம், மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
சிறந்த முறையில் குழு கூட்டங்கள், நிர்வாக சுழற்சி முறை, நிதி வரவு-செலவு, மேற்கொள்ளும், தொழில், தரம் மற்றும் தணிக்கை, வங்கி கடன், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி, விழிப்புணர்வு விவரங்கள், சமுதாய மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட விவரம், கிராம சபை பங்கேற்பு, மாற்றுத் திறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுவினர் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.
அடுத்த மாதம் 25-ந்தேதி கடைசி நாள்
விண்ணப்பிக்க அடுத்த மாதம்(ஜூன்) 25-ந் தேதி கடைசி நாளாகும். 25-ந் தேதிக்கு பின்னர் கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்க படமாட்டாது.
எனவே திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுயஉதவிக்குழுவினர், கூட்டமைப்பினர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.