முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை விழா

பரமத்திவேலூரில் முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை விழா நடைபெற்றது.;

Update:2023-02-26 00:15 IST
முருகன் கோவில்களில் சஷ்டி பூஜை விழா

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் மாசி மாத சஷ்டியையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடிஉயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சுவாமி திருக்கோயில், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான், நல்லியாம்பாளையத்தில் உள்ள சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்