பொதுமக்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறை கேட்பு

ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பொதுமக்களிடம் சண்முகையா எம்.எல்.ஏ. குறை கேட்டார்.

Update: 2022-11-26 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல அரசரடி பஞ்சாயத்து மேலமருதூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து தருவைகுளம் பஞ்சாயத்து அனந்தமாடன்பச்சேரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் பாண்டியராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, யூனியன் உதவி பொறியாளர் காயத்ரி, வேடநத்தம் வருவாய் ஆய்வாளர் சுகுனா, தருவைகுளம் கிராம நிர்வாக அலுவலர் ராஜன், தருவைகுளம் பஞ்சாயத்து தலைவர் காடோடி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்