விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சண்முகையா எம்.எல்.ஏ. ஆறுதல்
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சண்முகையா எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம், கீழமுடிமன், சிலோன் காலனி ஆகிய பகுதியில் இருந்து பெண்களை ஏற்றிக்கொண்டு வேலைக்காக தூத்துக்குடி சங்கரப்பேரி பகுதியில உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்ற வேன் புதியம்புத்தூர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை சண்முகையா எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைரஸ்ஜெபமணி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.