ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Update: 2023-07-15 18:07 GMT

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 25-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வழக்கமாக நடைபெறும் பிரதோஷ வழிபாடு அன்று வரும் பக்தர்களின் கூட்டத்தை விட நேற்று அதிகமாக இருந்தது. நந்திக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பிரதோஷத்தையொட்டி கோட்டைக்குள் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் கோட்டை பூங்காவில் அமர்ந்தும் பொழுது போக்கினர். ஏராளமான பக்தர்கள் வருகையால் கோவில் வளாகம் மற்றும் கோட்டை பூங்கா பரபரப்பாக காணப்பட்டது. இதையொட்டி ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்