பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-03-14 12:18 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே புதுப்பாளையம் ஊராட்சி அரிசிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கொங்கணாபுரம் அருகே பாச்சாலியூரை சேர்ந்த பழனியப்பன் (வயது 42) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக மாணவிகள், பெற்றோரிடம் கூறியுள்ளனர். பெற்றோர் கொங்கணாபுரம் போலீசில் ஆசிரியர் பழனியப்பன் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆசிரியர் பழனியப்பன், மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. உடனே போலீசார் பழனியப்பனிடம் விசாரணை நடத்தினர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனியப்பனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்