சிறுமிக்கு பாலியல் தொல்லை: கொத்தனாருக்கு 7 ஆண்டு சிறை-போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.;
பாலியல் தொல்லை
சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). கொத்தனார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி அதிகாலை 11 வயது சிறுமியான 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் பிரகாசுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து பிரகாசை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.