மாணவிக்கு பாலியல் தொந்தரவு; தொழிலாளி கைது

சுரண்டை அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-30 18:45 GMT

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஊர்மேலழகியான் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் மாணிக்கம் (வயது 25). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவரை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் இரவு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஊர்மேலழகியான் கிராமத்தில் உள்ள மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளியை கைது செய்து விடுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் மாணிக்கம் ஆய்க்குடி பகுதியில் பதுங்கி இருப்பதாக தென்காசி அனைத்து மகளிர் ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி மற்றும் போலீசார் அங்கு சென்று மாணிக்கத்தை கைது செய்தனர். அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்