பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2022-06-06 16:07 GMT

துடியலூர்

கோவையை அடுத்த பிரஸ்காலனி பகுதியை சேர்ந்தவர் வாசு தேவன் (வயது43). இவர் தனது வீட்டுடன் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவருடைய வீட்டிற்கு 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஒருவர் வந்தான். அவனிடம் வாசுதேவன் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளார்.

இது குறித்து அந்த மாணவன், தனது பெற்றோரிடம் கூறினார். அதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாசுதேவனை துடியலூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம் கைது செய்தார்.

இதையடுத்து வாசுதேவன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்