சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-13 18:11 GMT

திருமயம்:

திருமயம் அருகே சவேரியார் புரம் ஆலமரம் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 19). பெயிண்டர். இவர் கடந்த 10-ந் தேதி அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியிடம் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்