சிறுமிக்கு பாலியல் தொல்லை; கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டு வழங்கியது.;
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள திம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன்(வயது 37). கொத்தனார். சம்பவத்தன்று 14 வயது சிறுமி தனது வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டுக்குள் முனீஸ்வரன் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் கூடுதல் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
வழக்கினை விசாரித்த நீதிபதி கோபிநாத், முனீஸ்வரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.