2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: புதுக்கோட்டை வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புதுக்கோட்டை வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-12-22 18:56 GMT

புதுக்கோட்டையை சேர்ந்தவர் தீபன்ராஜ் (வயது 31). இவர் 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் தீபன்ராஜை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தீபன்ராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜரானார். மேலும் இந்த வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் கலைவாணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்