ரூ.30 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை அமைக்கும் பணி
திருவண்ணாமலையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை அமைக்கும் பணியை நகரமன்ற தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகராட்சி உட்பட்ட 16-வது வார்டு கடம்பராயன் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இன்று திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணியின் விவரத்தை கேட்டறிந்து அதனை தரமாகவும், விரைவாகவும் அமைக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
அப்போது தூய்மை அருணை மேற்பார்வையாளர் கார்த்தி வேல்மாறன், நகரமன்ற உறுப்பினர் சந்திரபிரகாஷ், நகராட்சி பொறியாளர் நீளேஸ்வர், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.