தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 39 வழக்குகளில் ரூ.2 கோடிக்கு தீர்வு

அரக்கோணத்தில் நடந்த தேசிய மக்கள் நீதி மன்றத்தில் 39 வழக்குகளில் ரூ.2 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2023-02-11 17:17 GMT

அரக்கோணம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று அரக்கோணம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான எம்.அருந்ததி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் நீதிபதி எம்.ஷாக்கிரா பானு மற்றும் வழக்கறிஞர் எம்.வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அதில் 39 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 42 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது. குற்றவியல் வழக்குகளில் 173 வழக்குகள் முடிக்கப்பட்டு அபராத தொகையாக ரூ.1,16,700 வசூல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சமரசத்தின் மூலம் சேர்த்து வைக்கப்பட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தங்கள் வழக்குகளை சமரசமாக முடித்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்