கூரை வீட்டுக்கு தீ வைப்பு

கள்ளக்குறிச்சியில் கூரை வீட்டுக்கு தீ வைத்ததாக மகன் மீது தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2023-05-29 18:45 GMT

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பழைய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்பன் (வயது 56) கூலித்தொழிலாளி. இவருடைய மகன் வெள்ளையன் என்பவருக்கும், கடலூர் சாவடியைச் சேர்ந்த தேவகி என்பவருக்கும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் கணவரை பிரிந்த தேவகி தனது குழந்தைகளுடன் கடலூரில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளையன் தனது பெற்றோரிடம், தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்குமாறு கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தனது பெற்றோர் மீது வெள்ளையன் கோபத்தில் இருந்து வந்த்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குப்பன் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி, மகளுடன் கோயம்புத்தூருக்கு சென்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு குப்பனின் கூரைவிடு தீப்பிடித்து எரிந்து சேதமானது. இதில் சுமார் ரூ.1½ லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குப்பன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எனது வீட்டை என்னுடைய மகன் வெள்ளையன் தீ வைத்து எரித்து விட்டதாக கூறியிருந்தார். அதன் பேரில் வெள்ளையன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்