அய்யப்பன் கோவில் முன் மேற்கூரை அமைக்கும் பணி

Update: 2022-09-13 17:27 GMT


திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் முன் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.31½ லட்சம் மதிப்பில் உயர்மட்ட நிழற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நேற்றுகாலை திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். மின்கம்பங்களை மாற்றி வைக்காமல் இருப்பதை அறிந்து அதை விரைந்து மாற்றியமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதாக கூறி அதிகாரிகளை எம்.எல்.ஏ. கடிந்துகொண்டார். ஐப்பசி மாதத்துக்குள் பணிகளை முடித்து ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர் 26-வது வார்டில் சிக்கண்ணா கல்லூரி பின்புறம் சைதன்யா பள்ளி அருகில் சாலைப்பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். பின்னர் 47-வது வார்டில் நல்லிகவுண்டர் நகர் பகுதியில் புதிய ரேஷன் கடையை க.செல்வராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். மேயர் தினேஷ்குமார், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மண்டல தலைவர்கள் உமாமகேஸ்வரி, கோவிந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்