வாராந்திர சிறப்பு ரெயில்களின் சேவை நீடிப்பு
திருநெல்வேலி - சென்னை வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் வரும் 4ம் தேதி முதல் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
திருநெல்வேலியிலிருந்து சென்னை வரை வாரந்தோறும் வியாழக்கிழமை இயக்கப்படும் திருநெல்வேலி - சென்னை வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (வ.எண் 06070), வரும் 4ம் தேதி முதல் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்வழித்தடத்தில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் சென்னை - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (வ.எண் 06069), வரும் 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருநெல்வேலியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (வ.எண் 06030), 7ம் தேதி முதல் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எதிர்வழித்தடத்தில், வாரந்தோறும் திங்கள்கிழமை மேட்டுப்பாளையத்திலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் (வ.எண் 06029), 8ம் தேதி முதல் ஜூலை 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.