தொடர் விடுமுறை நிறைவு எதிரொலி: ஈரோடு ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

தொடர் விடுமுறை நிறைவு எதிரொலியாக ஈரோடு ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-10-09 21:01 GMT

தொடர் விடுமுறை நிறைவு எதிரொலியாக ஈரோடு ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பள்ளிகள் திறப்பு

பள்ளிக்கூடங்களில் காலாண்டு தேர்வு முடிந்து கடந்த வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஆயுதப்பூஜையையொட்டியும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்றார்கள். மேலும் சிலர் சுற்றலா சென்றிருந்தனர். இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிக்கூடங்களும் இன்று திறக்கப்படுகிறது. இதனால் வெளியூர் சென்றிருந்தவர்கள் திரும்பினார்கள். இதேபோல் வெளியூரில் இருந்து ஈரோட்டுக்கு வந்தவர்களும் தங்களது ஊர்களுக்கு திரும்பினர். இதன் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயில்களில் வழக்கமாக உள்ள கூட்டத்தை விட நேற்று பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

கூட்டம் அலைமோதியது

முன்பதிவு இல்லாத ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தொலை தூரம் செல்ல வேண்டியவர்கள் ரெயில்களில் டிக்கெட் கிடைக்காமல் பெரும் சிரமப்பட்டார்கள். இதனால் அவர்கள் பஸ்களில் சென்றார்கள். எனவே பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

இதற்கிடையே பள்ளிக்கூடங்கள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில் நேற்று வகுப்பறைகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்தது. மாணவ-மாணவிகள் உட்காரும் இருக்கைகள், மேஜைகள் ஆகியன சுத்தம் செய்யும் பணி நடந்தது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் உள்ள வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்