மூத்த குடிமக்கள் அவை கூட்டம

மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை கூட்டம் நடந்தது.

Update: 2022-09-22 18:45 GMT

மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சையது உசேன், துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ரமணன் வரவேற்று பேசினார். இதில் தலைவர் டாக்டர் செல்வம் கலந்து கொண்டு மூத்த குடிமக்களுக்கு ஆலோசனை கூறினார்.

கூட்டத்தில் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையத்தை மயிலாடுதுறை நகரத்திலேயே அமைக்க வேண்டும். மயிலாடுதுறையில் கணபதி நகர், செங்கமேட்டுத்தெரு, ரஸ்தா மணவெளித் தெரு, குமரக்கட்டளை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவு நீர் தெருக்களில் வழிந்து ஓடுவதை சரிசெய்ய வேண்டும். கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களின் ரெயில் கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்