மூத்த குடிமக்கள் அவை கூட்டம்
மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை கூட்டம் நடந்தது
மயிலாடுதுறையில் மூத்தகுடி மக்கள் அவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அவைதலைவர் செல்வம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சையத் உசேன், துணை செயலாளர் ரமணன், செயற்குழு உறுப்பினர் சந்தானம், சாமி கணே சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் மதிவாணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மயிலாடுதுறை நகரில் காந்திஜி ரோடு, பட்டமங்கலத்தெருவில் ஒரு வழிச்சாலையாக உள்ள பகுதியில் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வரவிழா நடந்தது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் செல்வகுமார் கலந்து கொண்டு பேசினார். இதில் செயலாளர் தியாகராஜன், பொருளாளர் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணைசெயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.