செங்குளத்தில்டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்
செங்குளத்தில்டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது.;
தட்டார்மடம்:
சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் செங்குளத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. முகாமில் மருத்துவ அலுவலர் வள்ளி முன்னிலையில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள அங்கன்வாடி குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட்டது. செங்குளம் பகுதி முழுவதும் கொசுமருந்து தெளிக்கப்பட்டு, தண்ணீரில் இருந்த கொசு புழு அழிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தேவையானவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஜேசுராஜ், மகேஷ்குமார் உள்ளிட்ட டெங்கு மஸ்தூர், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.