செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வடகுச்சிபாளையம் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-10 18:45 GMT

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அருகே வடகுச்சிபாளையம் கிராமத்தில் செல்வவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு கடந்த 6-ந்தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு யாக பூஜை நடைபெற்று வந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 9 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது. பின்னர் மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 10.30 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முத்துமாரியம்மன் கோவில்

இதேபோல் அதே பகுதியில் உள்ள அரசமரத்தடி விநாயகர் கோவிலில் காலை 11 மணிக்கும், முத்துமாரியம்மன் கோவிலில் 11.30 மணிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். யாக சாலை பூஜைகள் மற்றும் அபிஷேகங்களை கடலூர் மோகன சுந்தரம் குருக்கள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை நாஸ்காம் (உலக துறை முகங்கள் பாதுகாப்பு மற்றும் தளவாடங்கள்) முதன்மை ஆலோசகர் பிரபு ராஜாங்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமலி அய்யப்பன், முருகன், மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் முன்னின்று செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்