தர்மபுரி கோட்டை கோவிலில் திருமண தடை விலக பார்வதி சுயம்வர யாகம்

தர்மபுரி கோட்டை கோவிலில் திருமண தடை விலக பார்வதி சுயம்வர யாகம் நடந்தது.

Update: 2022-06-19 17:13 GMT

தர்மபுரி:

தர்மபுரி டி.என்.சி. குரூப்ஸ் நிறுவனமான ட்ரீம் அலையன்ஸ் திருமண சேவைகள் சார்பில் திருமண தடை விலக பார்வதி சுயம்வர யாகம் தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிர்வாக இயக்குனர் டி.என்.சி.இளங்கோவன்- மீனா இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர். கோவில் அர்ச்சகர் செல்வமுத்து குமாரசாமி முன்னிலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. திருமண தடையாக உள்ள நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம், களஸ்திர தோஷம், செவ்வாய் தோஷம், குரு தோஷம், நாக தோஷம், முன்னோர் சாபம் மற்றும் பரம்பரை பழி பாவங்கள் ஆகிய தோஷங்கள் உடைய ஏராளமான ஆண்கள், பெண்கள் தங்களது ஜாதகத்துடன் இந்த சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட மங்கல பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜூன சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்