சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் கன்னிகாபுரம் விளையாட்டு திடல்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி, கன்னிகாபுரம் விளையாட்டு திடல் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.;

Update:2023-05-05 17:02 IST

இதேபோல், சென்னை புரசைவாக்கம், கான்ரான் ஸ்மித் சாலை மற்றும் சேத்துப்பட்டு ஆகிய 2 சலவைக்கூடங்கள் தலா ரூ.10 கோடி மதிப்பில் மறுவளர்ச்சி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இந்த இடங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தாயகம் கவி எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்