காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் சிறைபிடிப்பு; அபராதம் வசூல்

காஞ்சீபுரத்தில் உரிய ஆவணங்களின்றி இயங்கிய ஆட்டோக்கள் சிறை பிடிக்கப்பட்டு அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-09-18 11:01 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாநகரில் முறையான ஆவணங்கள் இன்றி அதிகளவில் ஆட்டோக்கள் செயல்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி அறிவுரையின்படி, காஞ்சீபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின் பேரில், 2-வது நாளாக மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார், காஞ்சீபுரம் பஸ் நிலையம், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் சாலையில் செல்லும் அனைத்து ஆட்டோக்களையும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் முறையான அரசு பதிவு ஆவணங்களான இன்சுரன்ஸ், ஆட்டோ உரிமம் புதுப்பித்தல், வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாத பல வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 14 ஆட்டோக்களை பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.

இந்த சோதனையில் 9 ஆட்டோக்கள் சிறை பிடிக்கப்பட்டு ரூ.90,700 அபராதம் விதிக்கப்பட்டும், இதர 5 ஆட்டோக்களுக்கு ரூ.21 ஆயிரம் உடனடி அபராதமும் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்