புகையிலை பொருட்கள் பறிமுதல்
திசையன்விளையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை மன்னர்ராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் மார்டின் (வயது 29). இவர் திசையன்விளை காமராஜர் சிலை அருகில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திசையன்விளை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த 175 புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.