புகையிலை பொருட்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-10-10 21:29 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் தாலுகா போலீஸ் சரகத்துக்குட்பட்ட தாராசுரம் பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருட்களை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில் போலீசார் தாராசுரம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாராசுரம் பொன்னியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஷாஜகான்(வயது25) மற்றும் துவரங்குறிச்சி திலகர் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்த சபரி என்கிற சாமிநாதன்(24) ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 1.26 லட்சம் மதிப்பிலான 84 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 3 செல்போன்கள் 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்