கிராவல் மண் கொண்டு சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

கிராவல் மண் கொண்டு சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-07 18:39 GMT

புதுக்கோட்டை புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை என்ஜினீயர் சங்கர் பெருங்களுர் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரியில் கிராவல் மண் இருந்ததை கண்டறிந்தார். இதையடுத்து, அந்த லாரி டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் ஆதனக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு சங்கர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஆதனக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராவல் மண் ஏற்றி சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் சின்னையார் சத்திரத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்