மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-10-06 18:12 GMT

நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். பகுதியில் இருந்து கொத்தூர் செல்லும் சாலையில் வாகன தணிக்கை செய்து கொண்டு இருக்கும் போது சந்தேகத்தின் பேரில் வந்த லாரியை தடுத்து நிறுத்தினார். உடனே லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். லாரியை சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்