53 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

உடன்குடி அருகே பள்ளிக்கூடம் அருகே லோடு ஆட்டோவில் வைத்து புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து 53 கிலோ புகையிலை பொருட்கள், லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-01 11:46 GMT

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி அருகே பள்ளிக்கூடம் அருகே லோடு ஆட்டோவில் வைத்து புகையிலை பொருட்களை விற்றவரை போலீசார் கைதுசெய்தனர். அவரிடம் இருந்து 53 கிலோ புகையிலை பொருட்கள், லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் ரோந்து

குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதியில் சில கடைகளில் புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை ெசய்யப்படுவதாகவும், வாகனங்களில் கடத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதைதொடர்ந்து குலசேகரன்பட்டினம் போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் உடன்குடி பகுதியில் ரோந்து சென்றனர். கிறிஸ்டியாநகரம் பள்ளிக்கூடம் அருகே உள்ள மெயின் ரோட்டில் லோடு ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் புகையிலை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அந்த ஆட்டோவில் இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

வியாபாரி கைது

விசாரணையில் அவர், செட்டியாபத்து முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் சித்திரை செல்வன் (வயது 48) என்பதும் தெரிய வந்தது. வியாபாரியான அவர் அந்த லோடு ஆட்டோவில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்ததும் தெரிந்தது. இதை தொடர்ந்து அந்த லோடு ஆட்டோவில் இருந்த 53.3 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து சித்திரை செல்வனை கைது செய்தார். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்திய லோடு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்