1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தனியார் நிறுவனத்தில் பதுக்கிய 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்

Update: 2022-07-01 13:59 GMT

கோவையை அடுத்த சூலூர் கலங்கல் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ரேஷன் அரிசி கடத்தி வைத்திருப்பதாக கோவை குடிமை பொருள் பிரிவு சி.ஐ.டி. (சிவில் சப்ளைஸ்) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையில் போலீசார் அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.

அதில், சூலூரை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசி யை வாங்கி அந்த நிறுவனத்தில் பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

உடனே அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்