மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-12-04 18:45 GMT

காரைக்குடி, 

சிவகங்கை பல் நோக்கு சமூக சேவை சங்கமும், எஸ்.ஆர். பட்டணம் ஊராட்சியும் இணைந்து நாகவயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர். பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் அஜிதா நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூந்தலூர் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். சிவகங்கை பல்நோக்கு சமூக சேவை சங்கத்தின் செயலர் பிரிட்டோ ஜெயபாலன் வாழ்த்துரை வழங்கினார். இதையொட்டி மக்களமைப்பு உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், ஊராட்சி மன்ற துணை தலைவர், நாகவயல் கிராம பொறுப்பாளர்கள், புனித மரியன்னை தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், மக்கள் அமைப்பு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் திலீபன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்