விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி
கிடங்கல் ஊராட்சியில் விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே கிடங்கல் ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் தலைமை தாங்கினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரேகா வரவேற்றார். விதைச்சான்று அலுவலர் பிரியங்கா பயிற்சி அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் பிரபாகரன் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினார். விவசாயிகளுக்கு அட்மா திட்ட ஆலோசனை குழு தலைவர் மணிமாறன் ஆலோசனை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப உதவி மேலாளர்கள் சிவஞ்சீவி, செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா அன்பழகன் நன்றி கூறினார்.