சீமான் போராட்டம்: போலீசார் அனுமதி மறுப்பு

வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான் போராட்டம் அறிவித்தார்.

Update: 2024-05-03 07:00 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை அமைந்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கி சர்வதேச மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன.

வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு கிராம மக்கள், சன்மார்க்க சங்கத்தினர், பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு கோா்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நடத்திய போராட்டத்தால் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதற்கிடையில், பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி வரும் நாளை (4-ம் தேதி) வடலூரில் மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக சீமான் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில், வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து சீமான் அறிவித்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் கட்சி சார்பில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்