வரி, வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
செங்கம் பகுதியில் வரி, வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் கடை வைத்திருப்போர் மற்றும் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் செலுத்தாதவர்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் துண்டிக்கப்பட்டது.
மேலும் பேரூராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடங்களில் வாடகை செலுத்தாத 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.