வாடகை செலுத்தாத கடைக்கு 'சீல்'
வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;
மலைக்கோட்டை:
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வரும் ஒரு கடையின் உரிமையாளர்கள், கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை சரியாக செலுத்தாததால் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி, நேற்று இரவு மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலுக்கு உரிமையான அந்த கடைக்கு உதவி ஆணையர் தலைமையில் பூட்டு போட்டு 'சீல்' வைத்தனர். மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க மலைக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.