போதை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு 'சீல்'
குப்பம் கிராமத்தில் போதை பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கண்ணமங்கலம்
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் உத்தரவின்படி கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தரணி, ஏழுமலை, தனிப்பிரிவு போலீசார் ஏகாம்பரம் மற்றும் பிரபாகரன் உள்பட பலர் நேற்று குப்பம் கிராமத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது குப்பம் கிராமத்தில் ஜெகநாதன் என்பவரின் மளிகை கடையில் ரூ.49 ஆயிரத்து 200 மதிப்புள்ள போைத பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
மேலும் கடையில் விற்பனை செய்த ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்.